வீட்டிலேயே கேக் செய்து அசத்தும் திருச்சி பெண்!

வீட்டிலேயே கேக் செய்து அசத்தும் திருச்சி பெண்!

சாக்லேட், கேக், பிஸ்கட் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவர். தன் மகன்களுக்கு கேக் செய்து கொடுக்க ஆரம்பித்து பின்னர் ஆர்வத்தின் பேரில் தொடர்ந்து செய்யஎண்ணி  முறையாக கேக் செய்வது குறித்து கற்றுக்கொண்டு வெற்றி கண்ட திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை  மதுரம் காலனியை  சேர்ந்த  ஸ்டெபியை சந்தித்த திருச்சி விஷன்....

முதலில் என் குழந்தைகளுக்காக வீட்டிலேயே கேக் செய்ய தொடங்கினேன் பின்ன நண்பர்கள் குடும்பத்தினரின் ஆதரவால் தொடர்ந்து வீட்டிலேயே கேக் தயார் செய்ய ஆரம்பித்தேன்! கேக் செய்வதினை தொடர்ந்து செய்துக்கொண்டிருந்தேன். அதை இன்னும் பெரிதாக செய்யலாம் என்று தோன்றியபோது தான் sugar & sprinkles என்ற பெயரில் கேக் விற்பனை செய்ய தொடங்கினேன். வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. 

என் கேக்குகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட தொடங்கிய பின்னரே  நண்பர்கள் தாண்டி அறிமுகம் இல்லாத பலரும் கேக்  செய்து தரும்படி கேட்டனர். பிடித்தவற்றை செய்யும் பொழுது கூடுதல் மகிழ்ச்சி அதனை தரமாகவும் ஆரோக்கியமாகவும் கொடுக்க  எண்ணினேன். பலருக்கும் நான் செய்த கேக் பிடித்து போனது தொடர்ந்து ஆர்டர் செய்ய தொடங்கினர்.குறிப்பாக நான் செய்து தருவதில் அதிகமாக chocotruffle பலரும் விரும்பி கேட்பர்.

https://instagram.com/sugarandsprinkles_official?igshid=ZDdkNTZiNTM=

இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது என்ற பாடல் வரிகள் போல் புதிய புதிய ருசியில் கேக் தயார் செய்ய  ஆர்வம் காட்டி வருகிறேன். red velvet jar, vennillekipfrerl,strawberry, brownies, Christmas cake, birthday cake, egglesscake, cookies ஒவ்வொன்றிலும் புதுமையாய் செய்ய எண்ணிணேண். அதேசமயம் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் கவனமாய் இருப்பேன். 

நண்பர்களை தாண்டி  இந்த பயணம் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. ஆர்டர் செய்த கேக்குகளை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு நானே சென்று கொடுத்து வருகிறேன். அவர்கள் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை என் உழைப்பிற்கான அங்கீகாரமாக நான் கருதுகிறேன். புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று  என்னுடைய முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்று பெருமையுடன் பணியை தொடர்கிறார் ஸ்டெபி!

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 #டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvision