திருச்சியில் கட்டுமான பொருட்கள் கண்காட்சி இன்று (24.12.2021) தொடக்கம்

திருச்சியில் கட்டுமான பொருட்கள் கண்காட்சி இன்று (24.12.2021) தொடக்கம்

கட்டுமானத்துறை சார்ந்த பல்வேறு தகவல்கள் சிறப்புகள் பல்வேறு கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விடை அளிக்கும் விதத்தில்   திருச்சி மக்களுக்கான கட்டுமான பொருள்களுக்கான கண்காட்சி நடைபெற உள்ளது.

டிசம்பர் மாதம் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா திருச்சிராப்பள்ளி சென்டர் வழங்கும் பில்ட்ராக் 2021 கட்டுமானப் பொருள்களின் ஒரு தனித்துவமான கண்காட்சி நடைபெற உள்ளது.

வெள்ளிக்கிழமை தொடங்கி இருபத்தி 26 தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 3 நாட்கள் நடக்கிறது. இந்த  கண்காட்சியில் கட்டுமான பொருட்கள் கொண்டு 80-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெறுகின்றன.

குறிப்பாக வீட்டு கட்டுமானத்திற்கு தேவையான எலக்ட்ரிக்கல், டைல்ஸ், மார்பிள்ஸ், சிமெண்ட், கம்பி,சானிட்டரிவேர் உட்பட அனைத்து வகையான பொருட்களும் இடம்பெறுகிறது. வீடு கட்டுவதற்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் இதற்கான ஏற்பாடுகளை கண்காட்சி தலைவர் ஜெயக்குமார், எம் மேத்தா, மைய தலைவர் ஜோதி மகாலிங்கம் மைய செயலாளர் பழனி குமார் மற்றும் கட்டிட சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn