திருச்சியின் இயற்கை உன்னதத்தை மேம்படுத்த சீரிய முயற்சி

திருச்சியின் இயற்கை உன்னதத்தை மேம்படுத்த சீரிய முயற்சி

 திருச்சியின் வாழ்வியலையும் இயற்கையின் உன்னதத்தையும் மேம்படுத்த பல சீரிய முயற்சியில் ஈடுபட்டு வரும் TRY பவுண்டேஷன் அலுவலக திறப்பு விழா திருச்சி தினமான நாளைஜுன்-1 காலை பத்தரை மணிக்கு மேல் தில்லைநகரில்நடைபெற உள்ளது. இத்திட்டத்திற்கான பங்களிப்பை Seed  அமைப்பு வழங்கியுள்ளது..

பசுமை மிக்க நிகழ்வோடு தொடங்க வேண்டும் என்பதற்காக தீரன் நகரில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு மியாவாக்கி குறுங்காடு அமைக்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தொடங்கி வைக்க உள்ளார்.

அதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் நம் திருச்சியில் தூய்மை மற்றும் பசுமையை மேம்படுத்த உறுதியளிக்கிறேன் என்கிற நடமாடும் கையெழுத்து இயக்கத்தை மேயர் அன்பழகன் கொடியசைத்து காலை 8.30 மணி அளவில் துவக்கிவைக்க உள்ளார்.

திருச்சி NSB சாலையின் வரலாற்றையும் தொன்மையையும் கூறும் குறும்படத்தை VDart நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வெளியிட உள்ளார்.

 அமைப்பின் நோக்கங்கள் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் அமைத்தல் சாலையில் ஆதரவற்று இருக்கும் விலங்குகளை பாதுகாத்தல் நீர்நிலை வழித்தடங்களை சீர்படுத்துதல் என மூன்று பிரதான நோக்கங்களைக் கொண்ட TRY பவுண்டேஷன் அலுவலகத்தை மங்கள்& மங்கள் நிர்வாக இயக்குனர் திரு மூக்கப்பிள்ளை துவங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ விருது பெற்ற  தாமோதரன், லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், மற்றும் திருச்சி நகர பொறியாளர்  அமுதவல்லி ஆகிய மூவரின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டி கௌரவிக்கப் படுகிறார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO