வட்டார வள பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் - வட்டார வள பற்றுநர்களுக்கான தகுதிகள் - (31.07.2023) அன்று வயது 25 - 45 இருக்க வேண்டும், ஏதேனும் ஒருபிரிவில் பட்டதாரி (Graduate) மற்றும் கணினி (M.S.Office) 6 மாத பயிற்சிக்கான சான்றிதழ் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 2 வருட களப்பகுதி ஒருங்கிணைப்பாளராக அனுபவம் புரிந்திருக்க வேண்டும், ஏற்கனவே வட்டார வள பயிற்றுனர் வேலை செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பணியிடம் காலியாக உள்ள வட்டாரத்தில் குடியிருக்க வேண்டும், கட்டாயம் மகளிர் சுய உதவிக்குழுவில் இருக்க வேண்டும், பெண் விண்ணப்பதாரர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு வயது வரம்பு தளர்வுகள் ஏதும் இல்லை.
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பின் மூலம் நியமிக்கப்படுவதால் இன சுழற்சிமுறை பொருந்தாது, இருசக்கரவாகன ஓட்டுநர் உரிமம் இருத்தல் வேண்டும், தங்கள் ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பின் பரிந்துரை கடிதம் / தீர்மானம் நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பணிகள் :- திறமையான சமூகவள பயிற்றுனர்களை கண்டறிந்து பயிற்சி அளித்து மேம்படுத்த வேண்டும், வட்டார வள பயிற்றுனர்கள் மூலம் பல்வேறு நிலைகளில் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துதல், சமூகம் சார்ந்த நிறுவனத்தை (SHG / VPRC/ PLF/ BLF) பலப்படுத்துவது, அவர்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக ஆக்குதல், பல்வேறு வாழ்வாதாரம் சேவைகளை ஊக்குவித்தல், FNHW / IB CB / FI வேலைகளில் அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேற்படி தகுதி உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழ்க்காணும் முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் :- 26.08.2023
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :- இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியரகம் வளாகம், திருச்சிராப்பள்ளி. மின்னஞ்சல் முகவரி:- தொலைப்பேசி எண்:- 04312412726 என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision