திருச்சி ஜெ.ஜெ.கல்லூரி மீது அறப்போர் புகார்

திருச்சி ஜெ.ஜெ.கல்லூரி மீது அறப்போர் புகார்

திருச்சியில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்..... ஸ்ரீரங்கம் தாலுகா அம்மாபேட்டை கிராமத்தில் உள்ள l 15.04 ஏக்கர் அரசு நீர் நிலைகள் மற்றும் அரசு நிலங்களை ஒன்றுதிருச்சி திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள ஜெ.ஜெ கல்லூரி ஆக்கிரமித்துள்ளதற்கான ஆதாரங்களும் அதை மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதற்கான ஆதாரங்களையும் இன்று வரை அவை அரசு நிலங்களாக இருப்பதற்கான ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம் தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள புதிய பத்திரப்பதிவு சட்ட திருத்தத்தின்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட பதிவாளரிடம் நேற்றைய தினம் (11.01.2023) புகார் அளித்துள்ளது. 

1994-95 ஆண்டுகளில் ஜெஜெ கல்லூரி மற்றும் அதன் நிர்வாகி தங்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொண்ட 15 ஏக்கர் அரசு நிலங்களின் விவரங்களை கீழே காணலாம். பத்திரபதிவு செய்ததற்கான ஆதாரங்களையும் இணைத்துள்ளோம். மேலும் இவை அரசு ஏ  பதிவேடு மற்றும் FMB இல் அரசு நிலம் என்று உள்ளதற்கான ஆதாரங்களையும் இணைத்துள்ளோம். 15 ஏக்கரில் 14.2 ஏக்கர் நிலம் நீர்நிலைகளாக உள்ளதற்கான கிராம வரைபட ஆதாரங்களையும் இணைத்துள்ளோம்.

மேலும் கல்லூரி கட்ட கடன் வாங்கும் பொழுது 2010 ஆம் ஆண்டு இந்த அரசு நில பத்திரப்பதிவு ஆவணங்களையும் வங்கியில் சமர்ப்பித்து மொத்தமாக 45 கோடி கடனையும் கல்லூரி பெற்றுள்ளது. அந்தக் கடன் 2022 ஆம் ஆண்டு அடைக்கப்பட்டு ஜெ.ஜெ எஜுகேஷனல் ஹெல்த் அண்ட் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் அன்றைய நிர்வாகி செல்வராஜ் பெயரில் உள்ள அனைத்து சர்வே எண் ஆவணங்களும் ஜெ.ஜெ எஜுகேஷனல் ஹெல்த் அண்ட் சாரிட்டபிள் டிரஸ்ட் பெயருக்கு ஆவண எண் 8000 / 2022 மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருச்சியின் நிலத்தடி நீர் அளவு கடந்த பல வருடங்களாக குறைந்து கொண்டே போகிறது என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் முக்கிய கடமை என்றும் அதை வேறு எந்த பயன்பாட்டிற்கும் மாற்றுவதற்கான அதிகாரம் ஒரு அரசுக்கு இல்லை என்றும் பலமுறை நீதிமன்றங்கள் தங்கள் தீர்ப்புகள் மூலம் தெரிவித்துள்ளது. எனவே இந்த நீர்நிலைகள் மீண்டும் மீட்டெடுக்கப்படுவது தமிழ்நாடு அரசின் மிக முக்கிய கடமையாகும்.

எனவே இன்றைய தேதியில் அரசு நிலமாக வருவாய் ஆவணங்களில் உள்ள இந்த நிலங்களை பத்திர பதிவு செய்தது மோசடியானது என்று அறிவித்து பத்திரபதிவு சட்ட பிரிவு 77 படி அவற்றை ரத்து செய்து அவற்றை செய்த அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மீது பிரிவு 81 இன் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் கோரி உள்ளோம். மேலும் திருச்சி ஆட்சியர் இந்த நீர் நிலைகளை தூர்வாரி இவற்றை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn