அழகுமுத்து கோன் யாதவ் 265வது குரு பூஜை விழா

அழகுமுத்து கோன் யாதவ் 265வது குரு பூஜை விழா

 தென்னிந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதல் சுதந்திர போராளியாக இருந்தவர் மாவீரன் அழகுமுத்துக் கோன் ஆவர் . அவர் அன்றைய திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் பிறந்தார். எட்டயபுரம் பாளையத்தில் படைத்தளபதியாக பணியாற்றினார்.

பிரிட்டிஷ் மற்றும் மருதநாயகம் படைகளுக்கு எதிரான போரில் தோற்கடிக்கப்பட்டார் . தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது.

 நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள். மாவீரன் அழகுமுத்துக் கோன் 1759 இல் பீரங்கியின் மூலம் கொல்லப்பட்டார். பீரங்கிகள் வெடித்துச் சிதறின.

வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை. . இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் முதல் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன். தாய்மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திர முழக்கமிட்ட வீரனைத் தந்து, தமிழ் சமூகம் பெருமை தேடிக் கொண்டது.

 திருச்சி மாவட்ட யாதவ சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 265வது மாபெரும் குருபூஜை விழா நாளை காலை 10 மணியளவில் திருச்சி பழைய பால்பண்ணையில் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து காலை 10 மணி அளவில் யாதவ இளைஞர்களின் இரு சக்கரப் பேரணி பாலக்கரை சப் ஜெயில் ரோட்டில் உள்ள ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் இருந்து மதுரை ரோடு வழியாக பால்பண்ணை வந்தடையும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP


#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO