பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன் பட்டம்

பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன் பட்டம்

நாட்டின் சுதந்திரத்திற்காக போரிட்டு தங்களுடைய உயிரை தியாகமாக கொடுத்த சுதந்திர போராட்ட தியாகிகளின் தினத்தை வரலாற்று தினமாக வருடம் தோறும் அனுசரித்து வருகிறது .இது தொடர்பாக மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரியின் வரலாற்று துறைக்கு அழைப்பு விடுவிக்கப்படும்.

வரலாறு தொடர்பான ஐந்து போட்டிகள் நடைபெறும். மதுரையில் உள்ள டோக் பெருமாட்டி கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறையின் தலைவர், தலைமை தாங்கி கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளை தொடங்கி வைத்தார். மொத்தம் 13 கல்லூரிகளில் இருந்து 107 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

கொடுக்கப்படும் தலைப்புகளுக்கு உடனடியாக கவிதை எழுதி வாசித்தல், ஓவியம், குழு நடனம், சுவரொட்டி தயாரித்தல், வரலாற்று மற்றும் நிகழ்கால நிகழ்வுகள் தொடர்பான வினாடி - வினா போன்ற போட்டிகள் நடைபெற்றன. 171 புள்ளிகளுடன் பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்று துறை முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 133 புள்ளிகளில் மதுரை பாத்திமா பெண்கள் கல்லூரி இரண்டாம் இடம் பெற்றது.

மாணவ, மாணவியர்களுக்கு திருச்சி - பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாத்துறை இயக்குனர் ஜெகதீஸ்வரி பரிசுகளை வழங்கி பாராட்டினார். சாம்பியன் பட்டத்தை வென்று கல்லூரிக்கு பெருமை பெற்றுத்தந்த மாணவ மாணவியர்களையும், வரலாற்றுத் துறை தலைவர் முனைவர் ஃபெமிலா அலெக்சாண்டரையும் பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வர் முனைவர் பிரின்சி மெர்லின் பாராட்டினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision