மீன் கடைகார்கள் மீது கடும் நடவடிக்கை - மாநகராட்சி மேயர் எச்சரிக்கை
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உறையூர் குழுமம் சாலையிலுள்ள காசி விளங்கி நவீன மீன் மார்கெட்டில் சுகாதார பணிகள் குறித்து மேயா் மு.அன்பழகன் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, பொது மக்களுக்கு சுகாதார கேடு ஏற்படுத்தும் வகையில் மீன் கழிவுகளை சாலை மற்றும் ஆற்றங்கரை வெளிப்பகுதியில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேயர் தெரிவித்தார்.
மீன் கழிவுகளால் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் முழுமையாக அடைக்கப்பட்டு, கழிவுநீா்கள் தேங்கி நிற்பதையும் உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார். மேலும், மீன் மார்கெட்டை தினமும் தூய்மை செய்ய வேண்டும் என்றும், அதோடு மாநகராட்சி குறிப்பிட்டுள்ள எல்லைக்குள் மீன் கடைகள் செயல்பட வேண்டும் என்றும்,
வெளிப்புறங்களில் மீன் கடைகள் போடுவதை நிறுத்த வேண்டும் என்றும் கடைகாரா்களுக்கு அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து மீன் கழிவுகளை வெளிப்புறத்தில் சாலை மற்றும் ஆற்றங்கரை ஓரத்தில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி ஆணையர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர் கலந்து கொண்டார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision