தென்னக ரயில்வே சாரண, சாரணியரின் 2000 கி.மீட்டர் இருசக்கர வாகன பேரணி

தென்னக ரயில்வே சாரண, சாரணியரின் 2000 கி.மீட்டர் இருசக்கர வாகன பேரணி

75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி தென்னக ரயில்வேயின் சாரண ,சாரணியர் இயக்கம் சார்பாக கடந்த 08.08.2022ம் தேதி திருவனந்தபுரத்தில் இருசக்கர வாகன பேரணி துவங்கியது. திருவனந்தபுரத்தில் துவங்கிய இருசக்கர வாகன பேரணி மதுரை திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை வருகிற 15-ஆம் தேதி சென்றடையும். முன்னதாக திருச்சி பொன்மலை ரயில் பணிமனை முன்பாக இருசக்கர வாகன பேரணியில் வந்தவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பொன்மலை இரயில்வே பணிமனையின் முதன்மைப் பணிமனை மேலாளர் ஷ்யாமாதார் ராம்  கொடியசைத்து சென்னைக்கு திருச்சி ரயில்வே சாரண, சாரணியர் இயக்கத்தினரும் அவர்களுடன் பயணத்தை வழியனுப்பி வைத்தார். சுதந்திர தின விழா அன்று தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் இருசக்கர வாகன பேரணிக்கான கொடியை கொடுத்துவிட்டு மீண்டும் சென்னையில் இருந்து சேலம், பாலக்காடு வழியாக திருவனந்தபுரத்தை சென்றடைவார்கள். 

இந்த இரு சக்கர வாகன பேரணியில் செல்பவர்கள் தேசிய கொடியை ஏந்தியவாறு செல்கின்றனர். 2065 கிலோமீட்டர் தூரம் 150க்கு மேற்பட்ட தென்னக ரயில்வே சாரண சாரணியர் இயக்கத்தை சேர்ந்த ஆண்களும் பெண்களும் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO