திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கிய தொண்டு நிறுவனம்

திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கிய தொண்டு நிறுவனம்

கோவிட் பெருந் தொற்றினால் நிலவும் அசாதாரண சூழலில் ஆக்சிஜன் உபயோகிப்பு என்பது அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று இரண்டாம் அலையால் மூச்சுத் திணறலின் வீரியம் அதிகமாக இருக்கிறது. ஆகவே ஆக்சிஜன் உபயோகிக்கும் தேவை அதிகரித்துள்ளது.

இதில் கடுமையான பாதிப்படைந்த கோவிட் நோயாளிகளுக்கும் அரசு மருத்துவமனையில் போர்க்கால அடிபடையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ஆக்சிஜன் வழங்க ஆக்சிஜன் செறிவூட்டிகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவமனையின் ஆக்சிஜன் வீணாகாமல் தடுக்க முடியும். ஆனால் தேசிய அளவிலான இந்த கடும் சூழலில் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இத்தகைய சூழலில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் நன்கொடையாக சென்னையை சேர்ந்த பூமிகா தொண்டு நிறுவனத்தின் மூலம் கிடைத்துள்ளன. துருக்கி போன்ற  வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 30 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இன்று திருச்சி அரசு மருத்துவகல்லூரியின் முதல்வர் வனிதாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

15 இலட்ச ரூபாய் மதிப்பிலான இந்த அரிதான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை (oxygen concentrators) நன்கொடையாக வழங்கிய பூமிகா தொண்டு நிறுவனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிப்பதவும், இதன் மூலம் மருத்துவமனையின் ஆக்சிஜன் செலவினத்தைக்  கட்டுப்படுத்த முடியும் என்று அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா  தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd