ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு  ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மெட்ரோ மற்றும் பிரண்ட்ஸ் ரத்த வங்கி சார்பில் ரத்ததானம்

ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு  ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மெட்ரோ மற்றும் பிரண்ட்ஸ் ரத்த வங்கி சார்பில் ரத்ததானம்

உலகிலேயே சிறந்த தானமாக ரத்ததானம் கருதப்படுகிறது. நாம் அளிக்கும் ரத்த தானத்தின் மூலம் பல உயிர்களை பூமியில்  காப்பாற்றிய மனமகிழ்ச்சி  ஏற்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் உள்ள நாடுகள் உலக இரத்த தான தினத்தை (WBDD) கொண்டாடுகின்றன. பாதுகாப்பான இரத்தம் மற்றும் இரத்த தயாரிப்புகளின் தேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தன்னார்வ, ஊதியம் பெறாத இரத்த தானம் செய்பவர்களுக்கு அவர்களின் உயிர் காக்கும் இரத்த பரிசுகளுக்கு நன்றி தெரிவிக்கவும் இந்த நிகழ்வு உதவுகிறது.

நோயாளிகளுக்கு பாதுகாப்பான இரத்தம் மற்றும் இரத்த தயாரிப்புகளை போதுமான அளவில் அணுகக்கூடிய இரத்த சேவை ஒரு பயனுள்ள சுகாதார அமைப்பின் முக்கிய அங்கமாகும். உலக இரத்த தானம் தினத்தின் உலகளாவிய தீம் ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்கு தெரியாத நபர்களுக்காக தங்கள் இரத்தத்தை தானம் செய்யும் தன்னலமற்ற நபர்களை அங்கீகரிக்கும் வகையில் மாறுகிறது.உலக இரத்த தான தினமாக ஜூன் 14 அனுசரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு  ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மெட்ரோ மற்றும் பிரண்ட்ஸ் ரத்த வங்கி இணைந்து இரத்த தான முகாமை ஏற்பாடு செய்திருந்தனர்.
 உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ரத்ததான முகாமை திருச்சி  மத்திய மண்டல காவல் ஆய்வாளர்  பாலகிருஷ்ண திறந்துவைத்து ரத்ததானம் செய்பவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மெட்ரோ தலைவர் ரோட்டன் கிளப்   சத்யபிரபு, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தானே முன்வந்து இரத்த தானம் செய்தார்..  செயலாளர்   ரஞ்சித், திட்டத் தலைவர் லட்சுமி நாராயண், மண்டல ஒருங்கிணைப்பாளர்   கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆளுநர்  மோகன், சார்ட்டர் தலைவர்   ராஜகோபால், முன்னால் தலைவர்  ஆர்.ராஜா, ஆர்.டி.என்.  ஜெகன், ரோட்டரி உறுப்பினர்கள் மற்றும் இரத்த நன்கொடையாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில்  கலந்துக்கொண்டனர்.  20 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இரத்த தானம் செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve