திருச்சியில் மறியலில் ஈடுபட்ட 3 பெண் வேட்பாளர்கள் உட்பட 20 மீது வழக்கு பதிவு.

திருச்சியில் மறியலில் ஈடுபட்ட 3 பெண் வேட்பாளர்கள் உட்பட 20 மீது வழக்கு பதிவு.

திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் முன்பு அதிமுக,பாஜக நாம்தமிழர் ,எஸ்டிபிஐ கட்சியினர் கடந்த  10.02.2022 அன்று மாலை 4 மணி அளவில் திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம்  கோட்ட அலுவலகத்திற்கு வாக்குப்பதிவு எந்திரங்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க நேரடியாக வந்து வேட்பாளர்களை பார்வையிட வரச்சொல்லி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தகவல் கொடுத்திருந்தனர். இதனையடுத்து கோ.அபிஷேகபுரம்  கோட்டத்திற்குட்பட்ட வார்டுகளில் உள்ள வேட்பாளர்கள் அலுவலகத்திற்கு வந்தனர்.

இரண்டு மணி நேரம் காத்திருந்தனர் அதுவரை எந்த தகவலையும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்பாளர்களுக்கு தெரிவிக்கவில்லை .ஒரு கட்டத்தில் கோபமடைந்த அதிமுக ,பாஜக, நாம்தமிழர், எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.காரசார விவாதம் தொடர்ந்து நடைபெற்றதால் கோட்டை வாசலுக்கு வந்து வேட்பாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர் .பின்பு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காவல்துறையினர் அவரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் உள்ளே அழைத்துச் சென்றனர்.


வாக்குப்பதிவு எந்திரங்களை வேட்பாளர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியது .27  முதல் 52 வரை உள்ள வார்டு வேட்பாளர்களை கோ.அபிஷேகபுர கோட்டத்திற்கு வேட்பாளர்களை வரவழைத்து இரண்டு மணி நேரமாக காத்திருப்பதால் சந்தேகமடைந்து போராட்டத்தில் இறங்கியதாக வேட்பாளர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் திருச்சி மாநகராட்சி கோ. அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட 3 பெண் வேட்பாளர்கள் உட்பட 20 மீது கொரானா பேரிடர்  காலத்தில் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக' நடந்துக்கொண்டதாக தில்லைநகர் போலீசார்
 வழக்கு பதிந்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn