குடிமைப்பணி தேர்வு - வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

குடிமைப்பணி தேர்வு - வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்ற கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 2023- ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஸ்), இந்திய வருவாய்ப் பணி (ஐஆர்எஸ்) உள்ளிட்ட 21 இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

இதில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளனர். இந்நிலையில் கிங்மேக்கர்ஸ் ஐஎஎஸ் அகாதெமி சார்பில் இந்த தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் நிர்வாக இயக்குநர் பூமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழக அரசின் முன்னாள் முதன்மை செயலர் ஜவஹர், மேற்கு வங்கத்தின் முன்னாள் முதன்மை செயலர் கேப்டன். சிவசைலம், முன்னாள் மத்திய சுங்க மற்றும் கலால் கூடுதல் ஆணையர் தமிழ்வேந்தன் முன்னாள் செயலர் விவேக் ஹரிநாராயன், வருமானவரி கூடுதல் இயக்குநர் நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை நினைவுப் பரிசுகளை வழங்கியதுடன் அறிவுரைகளையும் வழங்கினர்.  

 

அதன்படி நிகழாண்டு குடிமைப் பணி தேர்வில் இந்திய அளவில் 15-ஆவது இடம் பெற்ற குணால் ரஸ்தோமி. 27- ஆவது இடம் பெற்ற ஐதின்பாபு. அ.கோவிந்த ராம் (64-ஆவது இடம்), டாக்டர் ந.பிரசாந்த் 78- ஆவது இடமும், த.அவிக்கோஷ் (87- ஆவது இடம்) உள்பட 15-க்கும் மேற்பட்டோர் நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.  

 

மேலும் 'கிங் மேக்கேர்ஸ் ஐஏஎஸ் அகாடெமியில் நிகழாண்டுக்கான UPSC/TNPSC பயிற்சி வகுப்புகள் ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கவுள்ளன. இதற்கான சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமல்லாது கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் UPSC/TNPSC பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம் என அகாதெமியின் நிர்வாக இயக்குநர் பூமி நாதன் தெரிவித்தார். மேலும் தொடர்புக்கு:- 9444227273, www.kingmakersiasacademy.com.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision