தமிழகம் முழுவதும் முடிதிருத்தும் கடைகள் அடைப்பு - திருச்சி மருத்துவர் சமூக நலச்சங்கம் தீர்மானம்

தமிழகம் முழுவதும் முடிதிருத்தும் கடைகள் அடைப்பு - திருச்சி மருத்துவர் சமூக நலச்சங்கம் தீர்மானம்

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் மாநில தலைமையின் கீழ் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர் சமூக நலச் சங்கத்தின் சார்பாக பங்கேற்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மேலும் (24.1.2025) வெள்ளிக்கிழமை அன்று திருச்சி மாநகர் முழுவதும் உள்ள முடி திருத்தும் கடைகள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டமும் நடைபெறும் என்றும், மேலும் அன்றைய தினம் சென்னையில் நடைபெற இருக்கிற மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர் சொந்தங்களை அதன் செயலாளர் தர்மலிங்கம் அழைக்கிறார்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சில கோரிக்கைகள்

1. எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற எங்கள் மருத்துவர் சமூகத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தனியாக ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் ஏனென்றால் எங்கள் சமூகம் ஊருக்கு ஓர் இரு குடும்பங்கள் என்பதாலும் அடித்தட்டு மக்களை தொடங்கி மற்ற சமூகத்தினரால் நாங்கள் மிரட்டப்படுகின்றோம் ஆதிதிராவிடர் தொடங்கி ஆதிக்க சமூகம் இரு பக்கமும் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் எங்களை அடித்தும் சாதியின் பெயரால் திட்டியும் நீங்கள் ஊருக்கு ஒருத்தன் எங்களை என்ன செய்ய முடியும் என்று எள்ளி நகையாடுகின்றனர். எங்கள் பெண்களின் நிலை அதைவிட மோசம் வீட்டு வேலைக்கு என்று அழைத்துக் கொண்டு சென்று பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்படுத்தி கொடுமைக்கு உட்படுகிறார்கள் இதை நாங்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தால் அங்குள்ளவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்து எங்கள் புகாரின் ஏற்கவும் சி எஸ் ஆர் காப்பி கொடுப்பதற்கும் மறுக்கிறார்கள் ஆகையால் எங்களுக்கு சட்ட பாதுகாப்பு வேண்டும்

2. கல்வி வேலை போன்றவற்றில் தனி உள் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் மிகவும் பிற்பட்ட வகுப்பில் எம்பிசி நாங்கள் இடம் பெற்று இருக்கிறோம் ஆனால் எம்பிசியில் 20% ஒரு புள்ளி விழுக்காடு கூட எங்களுக்கு கிடைப்பதில்லை பொருளாதார ரீதியில் வளர்ந்த சமூகமும் வளர்ச்சி என்பது அறியாத நாங்களும் ஒரே பிரிவில் இருக்கிறோம் இதனால் நாங்கள் எப்படி பாதிக்கப்படுகிறோம் கல்வி வசதி படைத்த மற்ற சமூகத்தினர் பிள்ளைகளை டியூஷன் படிக்க வைத்து அதிக மதிப்பெண் எடுக்க வைத்து விடுகிறார்கள் ஆனால் மதிப்பெண் அடிப்படையில் அவர்களே ஒதுக்கீடு சலுகையை முழுமையாக அனுபவிக்கிறார்கள்

அதனால் வசதி குறைந்த நாங்கள் அரசு பள்ளிகளில் படிப்பதனாலும் போதிய பயிற்சி கிடைக்காததால் எங்கள் மருத்துவ சமூக பிள்ளைகள் குறைந்த மதிப்பெண்கள் பெற்று பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள் அதனால் எங்கள் சாதிக்கு என்று தனி இட ஒதுக்கீடு கொடுத்தால் எங்கள் சமூகம் கல்வி நிலையிலும் உயர் பெற முடியும் நாங்கள் வேலைக்கு நன்கொடை செலுத்தும் அளவிற்கு பொருளாதாரம் இல்லை ஆகையால் எங்கள் மருத்துவ சமூகத்தினர் பிள்ளைகள் குழந்தை தொழிலாளர்கள் ஆக்கப்படுகின்றனர்

3. கோயில்களில் மொட்டை அடிக்கும் காணிக்கை முடியை மருத்துவ சமூகத்திற்கு இயலும் இடவேண்டும் அரசு அறநிலையத்துறை அல்லது அதில் வரும் லாபத்தை கணக்கில் கொண்டு ஒரு குறிப்பிட்ட விழுக்காடு அளவு மொட்டை அடிக்கும் தொழிலாளிக்கு கொடுக்க வேண்டும் நாங்கள் செய்கின்ற மொட்டை அடிக்கும் தொழிலை சமூக கேவலமாக கருதுகின்றனர் ஆனால் அதில் வருகின்ற லாபத்தை அடைவதால் பெருங்க கவனம் செலுத்துகின்றனர் சூரி சிரங்கு போன்ற கிருமிகளை மட்டும் தான் எங்களுக்கு சன்மானமாக கிடைக்கின்றது ஆகையால் அரசு இதை கவனத்தில் கொண்டு காணிக்கை முடி ஏளமோ அல்லது ஒரு குறிப்பிட்ட லாபமோ எங்களுக்கு கிடைக்க அரசு அறநிலைத்துறை கட்டாயம் ஏற்பாடு செய்ய வேண்டும்

4. இசை கலைஞர்களுக்கு ஏனைய இசைக்கருவிகள் வாசிக்கும் இசைக்கலைஞர்களுக்கு அரசாங்கம் வழங்கும் கலைமாமணி வளர் இசை மணி போன்ற விருதுகள் தகுதி வாய்ந்த எங்கள் மருத்துவர் சமூக இசை கலைஞர்களுக்கு வழங்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் இயல் இசை நாடக மன்றத்தில் எங்கள் மருத்துவர் சமூகத்தில் உள்ள நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்களை தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் ஆக வேண்டும் சுதந்திர தின விழா குடியரசு தின விழா போன்ற அரசு விழாக்களில் மற்ற இசைக் கலைஞர்களுக்கு பாராட்டி சான்று அளிப்பது போல்

எங்கள் மருத்துவர் சமூகத்தை சார்ந்த தமிழ் நாதஸ்வர கலைஞர்களையும் அரசாங்கம் பாராட்டு சான்று அளித்து தக்க சன்மானம் அளிக்க வேண்டும் அரசு விழாக்களில் மங்கல இசை வாசிக்க எங்கள் மருத்துவர் கலைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து அழைப்பிதழ்களில் பெயர் பொறிக்கப்பட வேண்டும் எங்கள் மருத்துவர் சமூகத்தைச் சார்ந்த தமிழ் நாதஸ்வர இசைக்கலைஞர்களுக்கு எங்கள் மருத்துவர் சமூகத்தின் அமைப்பின் பரிந்துரை பேரில் மாவட்டம் தோறும் இலவச இசைக் கருவிகள் வழங்கப்பட வேண்டும்.

தேர்தல் மற்றும் அரசியல் விவகாரங்களில் எங்கள் சாதி சிறுபான்மையிலும் குறும்பான்மை சமூகத்தினர் எங்களால் வார்டு உறுப்பினர் பதவி கூட போட்டியிட்டு வெற்றி பெற இயலாது ஆகையால் எங்களைப் போன்ற குறும்பான்மை மருத்துவர் சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை தமிழகத்தில் விட்டுப்போன மேல் சபை திரும்பக் கொண்டு வந்து நியமனப்பதவி பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் எங்களில் ஒருவரால் தான் எங்கள் மருத்துவர் சமூகத்தை நிலைப்பாளர்களை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து எங்கள் குறைகளை தீர்வு காண முடியும் அறிவியல் தொழில்நுட்ப காலத்திற்கு முன்பிருந்தே எங்கள் மருத்துவர் சமூக பெண்கள் தான் மகப்பேறு பார்த்த மருத்துவச்சிகள் அதனால் எங்கள் சமூகத்தில் உள்ள விதவைப் பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் ஆயா மற்றும் உதவியாளர் போன்ற வேலைகள் வழங்கப்பட வேண்டும் அல்லது ஏனைய அரசு அலுவலகங்களில் தகுதிக்கேற்ப வேலை வழங்கப்படுதல் வேண்டும் அப்போதுதான் மற்ற சமூகத்தினர் போல் நாங்கள் மேன்மை பெற முடியும்

6 முடி திருத்தும் தொழிலாளிக்கு இலவச மருத்துவ காப்பீடு வேண்டும் இலவசமாக முழு உடல் பரிசோதனை மற்றும் மருத்துவ செலவு அரசு ஏற்க வேண்டும் ஏனென்றால் நாங்கள் நோயுள்ள ஒருவருக்கு நோயற்றவருக்கும் சவரத் தொழில் செய்வதனால் நோய்ல ஒருவரின் மூலம் எங்களுக்கு டி பி ஆஸ்மா சிரங்கு போன்ற நோய்கள் தொற்றி கிருமிகள் மூலம் எங்களுக்கு பரவுகின்றது இதனால் எங்கள் சமூகத்தைச் சார்ந்தவர்கள் 50 விழுக்காடு ஆண்கள் 40 வயதிலேயே உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. மேற்கண்ட தீர்மானங்களை வலியுறுத்த திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர் சமூக நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் தலைவர் செல்வராஜ், செயலாளர் பா தர்மலிங்கம், பொருளாளர் முருகேசன், அவைத்தலைவர் தர்மலிங்கம், துணைத்தலைவர்கள் கோபி, குஞ்சுவேல், ஸ்டாலின் சுரேஷ் பொன்னுச்சாமி மற்றும் துணை செயலாளர்கள் ஜி மதியழகன், எஸ் பி ராமமூர்த்தி, ஆர்கே ரங்கராஜ், அசோக், என் பாண்டியராஜ், இளைஞர் அணியை சார்ந்த சுப்பிரமணியன், சரவணகுமார், முருகேசன், செந்தில்குமார், கோபிநாத், பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியாக பொருளாளர் முருகேசன் கூட்டத்திற்கு நன்றி உரை கூறினார். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision