வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு கிராம வேளாண் பணி அனுபவ பயிற்சி சான்றிதழ்
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த உப்பிலியபுரம் அருகே புடலாத்தியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குனர் அலுவலகத்தில் முசிறி எம்.ஐ.டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு கிராம வேளாண் பணி அனுபவ பயிற்சி சான்றிதழை வேளாண்மை உதவி இயக்குநர் வழங்கினார்.
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாரத்தில் முசிறி எம்.ஐ.டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கிராம வேளாண் பணி அனுபவ பயிற்சி திட்டதின் கீழ் விவசாயம் சார்ந்த பல்வேறு களப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியான "வேளாண்மை உதவி இயக்குனர் இணைப்பு" களப்பணிகள் இன்று மே-7ந் தேதி நிறைவு செய்தார்கள். அதனைத் தொடர்ந்து துறையூர் வேளாண் உதவி இயக்குநர் செல்வகுமாரி மற்றும் வேளாண் அதிகாரி நல்லேந்திரன் ஆகியோர் மாணவர்களுக்கு கிராம வேளாண் பணி அனுபவ பயிற்சி சான்றிதழை வழங்கினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision