தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது
கடந்த 27.09.22ந்தேதி கேகேநகரில் அதிகாலை வீடு புகுந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தும், அவர் கழுத்தில் அணிருந்த 6% பவுன் தங்க தாலி செயினை பறித்தும், அதனை தொடர்ந்து 01.10.22ந்தேதி கேகேநகர் ஆசாத்நகரில் அதிகாலை துளசி இலை பறித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் சுமார் 9 பவுன் தங்க தாலி செயினை அடையாளம் தெரியாத நபர் பறித்து சென்றதாக கே.கே நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர புலன்விசாரணை செய்யப்பட்டடது.
மேற்கண்ட வழக்கு தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, புலன்விசாரணையில் சந்தேகநபர்களின் நடவடிக்கைளய தீவிரமாக கண்காணித்தும், சந்தேக நபர்களின் அலைபேசி எண்களின் விபரங்களை சேகரித்தும், கேகேநகர் பகுதியில் CCTV கேமார பதிவுகளை ஆய்வு செய்தும், தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் முகமது உசேன் 28/22 த.பெ.முகமது முஸ்தபா என்பவர் மதுரை மாநகரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த 30.08.22தேதி சிறையில் இருந்து வெளியில் வந்தவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்தபோது, கடந்த 27.09.22ந்தேதி கேகேநகரில் வீடு புகுத்த எதிரி முகமது உசேன் தனியாக இருந்த தாயாரின் கைகளை கட்டிபோட்டு, அவரிடம் இருந்து 14 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டும், அவரது மகளை கட்டிபோட்டு அவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும் திருச்சி மாநகர் மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வீடு புகுந்து நகைகளை கொள்ளையடிப்பதை தொழிலாக செய்வதாக ஒப்புக்கொண்டார். மேலும் மேற்கண்ட எதிரி முகமது உசேன் தமிழகத்தில் கோவை, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் ஈரோடு என பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுப்பட்டதாக 30 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேற்கண்ட எதிரி முகமது உசேன் திருச்சி மாநகர தனிப்படையினரால் கைது செய்யப்பட்டு, வழக்கு சொத்துக்கள் சுமார் 12 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டு, வழக்கின் எதிரி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மேற்கண்ட வழக்கில் சிறப்பாக பணியாற்றி துரிதமாக புலன்விசாரணை செய்து எதிரியை கைது செய்த காவல் துணை ஆணையர் தெற்கு சரகம், காவல் உதவி ஆணையர் கேகேநகர் சரகம், செசன்ஸ்கோர்ட் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், தளிப்படை காவல் ஆய்வாளர், உதிவு ஆய்வாளர் தனிப்படையினர் மற்றும் புலன்விசாரணையில் நுணையாக இருந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆனைாயர் திரு.G.கார்த்திகேயன், வெகுவாக பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO