குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு அடுத்த நாளில் வரும் விஜயதசமி கல்விக்கு உகந்த நாளாகவும், அன்றைய தினத்தில் கல்வியை துவங்குவது மிகவும் சிறப்பான ஒன்றும் என்று கூறப்படுகிறது.
பிரம்மா சரஸ்வதிக்கு என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலயங்கள் இல்லை என்றாலும் ஆனால் திருச்சி உத்தமர் கோவிலில் விஷ்னு, பிரம்மா, சிவன் உள்ளிட்ட மும்மூர்த்திகளுக்கு தனி சன்னதியும் பார்வதி, மகாலட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட முப்பெரும் தேவியர்களுக்கு தனி சன்னதியும் உள்ளது. இதனால் இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் விஜயதசமியை முன்னிட்டு திருச்சி உத்தமர் கோவிலில் உள்ள சரஸ்வதி சன்னதியின் முன்பாக நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வருகை தந்து வாழை இலையில் நெற்மனிகளை கொட்டி தமிழ் எழுத்துக்களில் முதல் எழுத்தான "அ" எழுத்தை எழுத கற்றுக்கொடுத்து வருகின்றனர்.
அ என்னும் தமிழ் எழுத்தை விஜயதசமி அன்று எழுதக்கூடிய இதனை வித்யாரம்பம் எழுதுதல் என்பார்கள். அந்த வகையில் மும்மூர்த்திகள் ஸ்தலமான திருச்சி உத்தமர் கோயிலில் திருச்சி மட்டுமல்லாமல் திருச்சியை சுற்றி உள்ள கரூர், பெரம்பலூர்,
அரியலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து வித்யாரம்பம் பயிற்று வித்தனர்.
வித்யாரம்பம் பயிற்றுவித்து இன்றும் நாளையும் தங்களது குழந்தைகளை பாடசாலைகளுக்கு அழைத்து சென்று பெற்றோர்கள் சேர்க்க உள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO