மதி அங்காடி அமைக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்கலாம் -ஆட்சியர் தகவல்
மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திட தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் மகளிர் உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்திடும் பொருட்டு மதி அங்காடி" அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கற்றுலா தலங்களின் “மதிஅங்காடி" அமைத்திட கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிபந்தனைகள்:
மகளிர்உதவிக்குழு,ஊராட்சிஅளவிலான. / பகுதி அளவிலானகூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
மகளிர் சுய உதவிக்குழு தேசிய ஊரக / நகர்புற வாழ்வாதார இணையத்தில்பதிவு பெற்றிருத்தல் அவசியம்
பொருட்கள் உற்பத்தி / விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவமுடையவராக இருந்தல் வேண்டும்,மாற்றுதிறனாளி நலிவுற்றோர் குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சுய உதவிக்குழு தரமதிப்பீட்டில் தேர்ச்சி பெற்று இருப்பதுடன் ஒரு வங்கிக்கடன் இணைப்பாவது பெற்று இருத்தல் வேண்டும்.சுய உதவிக்குழு தொடங்கி ஓர் ஆண்டாவது பூர்த்தி செய்திருக்க வேண்டும்,
சுய உதவிக்குழு மீது எந்தவித புகார்களும் இருத்தல் கூடாது.மகளிர் சுய உதவிக்குழு / கூட்டமைப்பிற்கு அங்காடி நடந்துவதற்கான வாய்ப்பு 6மாதங்களுக்கு வழங்கப்படும் பின்னர் சுழற்சி விற்பளை மற்றும் திறன்அடிப்படையில் தொடர்ந்து அனுமதி வழங்கப்படும்.எனவே, மேலே குறிப்பிட்டுள்ள தகுதி உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து விபரம் அறிந்திட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மகளிர் திட்ட(0431-2412726) அலுவலகத்தை நேரில் அணுகிட தகவல்தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்மா.பி ரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn