திருச்சியில் கார்ப்பரேட் லீக் விறுவிறுப்பான இறுதிப் போட்டி:
திருச்சி தேசிய கல்லூரியில் கார்ப்பரேட் லீக் கிரிக்கெட் போட்டி இறுதி போட்டி நடைபெற்றது. இது தேசிய கல்லூரி உடற்கல்வி துறையின் சார்பாக நடத்தப்பட்ட மாபெரும் போட்டியாகும்.
இப்போட்டியில் 20 அணிகள் பங்கேற்ற கார்ப்பரேட் போட்டியில் 93 Not Out குழுவினர் பெயருக்கு ஏற்றார் போலவே முதல் பரிசினையும் ஒமேகா ஹெல்த் கேர் குழுவினர் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசையும் காவேரி மருத்துவமனை நான்காம் பரிசினையும் தட்டிச் சென்றனர்.
முதல் பரிசை தட்டிச் சென்ற 93 Not out குழுவின் ஆருத்ரா அவர்கள் பேசியபோது ” இந்த வெற்றியையும் தாண்டி எங்களுடைய சமூக வளைதள பணிகளை கடந்து இந்த ஒரு வாய்ப்பை தேசியக்கல்லூரி எங்களுக்கு கொடுத்திருக்கிறது.பத்து வருடங்களுக்கு முன்னாடி கிரிக்கெட் விளையாடும் போது தண்ணிர் , பசி, தூக்கம் அனைத்தையும் மறந்து ஒரு வெறித்தனமாக விளையாடுவோம். ஆனால் இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் பணி என்கின்ற ஒன்றை நோக்கி மட்டுமே சென்று கொண்டிருந்தோம். கார்ப்பரேட் போன்ற நிகழ்ச்சிகள் ஏதாவது என்றால் ஹோட்டல்கள் இது போன்ற இடங்களில்தான் நடத்துவோம்.ஆனால் பழைய நினைவுகளை திருப்பி அளிக்கும் விதமாக கார்ப்ரேட் லீக் கிரிக்கெட் போட்டி ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. இது வருடா வருடம் தொடர வேண்டும்” என்றார்.
மேலும் இப்போட்டியில் கல்லூரி செயலர் ரகுநாதன் மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரி துணை முதல்வர் அலெக்ஸ், Amman TRY சோமசுந்தரம்,VDart பொதுமேலாளர் ஆண்டனி ஈப்பன் ஜமால் முகமது கல்லூரி குணசீலன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிக்கு பரிசினை வழங்கினார். தேசியக் கல்லூரி உடற்கல்வி துறை தலைவர் பிரசன்ன பாலாஜி மற்றும் அவரது குழுவினர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்தனர். மேலும் ஆண்டுதோறும் இவ்விழா நடைபெறும் என்று அறிவித்தனர்.