அரசு பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆவது வகுப்புகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நடந்து வருகிறது.இதனை போகும் முடிவை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது.அதன்படி 2449 முதுகலை பட்டதாரிகளை தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க உள்ளது.

திருச்சி: மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் திருச்சி முக்கொம்பு
மேலணையை வந்தடைந்தது. அங்கு திரண்டிருந்த விவசாயிகள் காவிரி ஆற்றில்
மலர்களை தூவி தண்ணீரை வரவேற்றனர். டெல்டா மாவட்ட விவசாயத்திற்காக
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி
ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர்
இல்லாததால் அப்போது தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கர்நாடகாவில்
பெய்த கனமழையால் கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிறைந்து
மேட்டூருக்கு நீர் அங்கிருந்து திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை கடந்த சில
நாட்களுக்கு முன்பு 100 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து டெல்டா மாவட்ட
விவசாயத்திற்காக மற்றும் குடிநீர் தேவைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 11-
ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீரை காவிரி ஆற்றில்
திறந்துவிட்டார்.