பள்ளி மாணவ-மாணவியருக்கான வட்டார அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டி

பள்ளி மாணவ-மாணவியருக்கான வட்டார அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டி

இந்திய அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் திருச்சிராப்பள்ளி மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் பதுவைநகர் டாக்டர் பீ. ஆர். அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக உலக செஸ் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருக்கான வட்டார அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டி ஸ்ரீரங்கம், டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று (20.07.2023) நடைபெற்றது.

3 பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 பள்ளிகளில் இருந்து 96 மாணவ மாணவியர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஸ்ருதி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அந்தநல்லூர் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் கலந்து கொண்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் நேரு யுவ கேந்திரா கணக்கு மற்றும் நிகழ்ச்சிகள் உதவியாளர் மகேஸ்வரன், கிழக்கு ரெங்கா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சைவராஜ், ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்க தலைவர் மோகன்ராம், ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் நிறுவன தலைவர் சங்கர், ஜான்சிராணி மகளிர் மன்ற நிறுவனர் ஹேமலதா, புதிய பாதை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் தீபலட்சுமி, தேவசேனா அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் ஜெயசுதா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். 

12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான செஸ் போட்டியில் ஸ்ரீரங்கம் டாக்டர். ராஜன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் 6 ஆம் வகுப்பு மாணவர் புவனேஷ் கண்ணா முதல் இடம் பிடித்தார். ஸ்ரீரங்கம் தேவி தெரு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் 6 ஆம் வகுப்பு மாணவன் ஸ்ரீ சாஞ்லின் இரண்டாம் இடமும், ஸ்ரீரங்கம் டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் 6 ஆம் வகுப்பு மாணவி அபிஸ்ரீ மற்றும் பெருகமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 6 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீ நித்தியாவும் மூன்றாம் இடம் பிடித்தார்கள்.

13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான செஸ் விளையாட்டு போட்டியில் ஸ்ரீரங்கம் டாக்டர். ராஜன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் 7 ஆம் வகுப்பு மாணவன் செழியன் முதலிடமும் முள்ளிக்கரும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 7 ஆம் வகுப்பு மாணவன் முகுந்தன் இரண்டாம் இடமும் ஸ்ரீரங்கம் டாக்டர். ராஜன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் 7 ஆம் வகுப்பு மாணவன் அனிஷ் மற்றும் ஸ்ரீரங்கம், ஸ்ரீ ரெங்கா மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் 7 ஆம் வகுப்பு மாணவன் கபிலன் மூன்றாம் இடமும் பிடித்ததார்கள். 

14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான செஸ் விளையாட்டு போட்டியில் ஸ்ரீரங்கம், ஸ்ரீ ரெங்கா மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவன் அஸ்வின் குமார் முதலிடமும், ஸ்ரீரங்கம், தேவி தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா இரண்டாம் இடமும், கொண்டையம்பேட்டை நேருஜி நினைவு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவன் கோபிநாத் மற்றும் முள்ளிக்கரும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவியும் ஸ்ருதி மூன்றாம் இடமும் பிடித்தார்கள்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்கள். முன்னதாக டாக்டர் பீ. ஆர். அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றத்தின் நிறுவனர் பக்கிரிசாமி வரவேற்புரை வழங்கினார். ஸ்ரீரங்கம், டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை லில்லி ப்ளோரா நன்றி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision