தீபாவளி இரவு நேர வியாபாரம் இந்த வருடம் உண்டா? திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பேட்டி
தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருச்சி (Nscb road) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் தற்காலிக காவல் உதவி மையம் கட்டுப்பாட்டு அறை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்.... 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் 167 கண்காணிப்பு கேமராக்களும், நான்கு இடங்களில் தற்காலிக வாகன சோதனை மையங்களும் மேலும் வெடிகுண்டு கண்டறியும், நிபுணர்கள் ஏழு குழுக்களாகவும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற தடுப்பு காவல்துறையினர் 710க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தீபாவளி பண்டிகை நேரத்தில் வெளியூர்களுக்கு செல்பவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் கொடுத்து விட்டு செல்ல வேண்டும். மேலும் சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு இன்றைய நடவடிக்கை எடுத்து விரைவில் தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.
மேலும் கடந்த ஒரு வருடத்தில் திருச்சி மாநகரில் வழிப்பறி சம்பவங்கள் 20 நடந்துள்ளது. அதில் 15 சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 70% திருடு போன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
18 கொலைகள் நடந்துள்ளது. அதில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனை தொடர்பாக 12 பேர்மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து 700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO