தேர்தலில் தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. புகார் மனு

தேர்தலில் தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. புகார் மனு

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 36-வது வார்டு பகுதியில் கடந்த 6ஆம் தேதி நடபெற்ற தேர்தலில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்காலிக பணியாளர்களாகவும், முககவசம் வழங்குவது, கிருமி நாசினி தெளிப்பது, கையுறை வழங்குவது, வெப்பநிலை சோதிப்பது உள்ளிட்ட பணிகளை வாக்குப்பதிவின் போது செய்தனர்.

அப்போது மதிய உணவு வழங்கவில்லை என்று தெரிவித்த இளைஞர்கள் தேர்தல் முடிந்து இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகின்றனர்.

ஏற்கனவே உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கொடுத்தும் பலனில்லை என்றும் தற்போது மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் கொடுத்துள்ளனர். முன்னதாக தங்களுக்கு ஆயிரம் ரூபாய் ஒருநாள் ஊதியமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர். பின்பு 750 ரூபாய் தான் வழங்கப்படும் என தெரிவித்தனர் அதுவும் வழங்கவில்லை என்ற புகார் மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளனர்.

இதே போன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றிய இளைஞர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr