2021ல் இருந்து தகவல் வேணும் அமலாக்கத்துறை அதிரடி !!

Sep 22, 2023 - 08:47
Sep 22, 2023 - 09:19
 394
2021ல் இருந்து தகவல் வேணும் அமலாக்கத்துறை அதிரடி !!

தமிழகம் முழுவதும் மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள், அவர்களு டன் தொடர்பில் இருப்பவர்களுக்கு சொந்தமான 34 இடங்களில் கடந்த 12ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் மணல், கிராவல் மண் விற்பனையில் முறைகேடுகளும் அதன் மூலம் சட்ட விரோத பண பரிமாற்றமும் நடப்பதாக புகார் கூறப்பட்டு வருவதையொட்டி, இந்த சோதனை நடந்தது.

மணல் விற்பனையில் பெரும் புள்ளிகளான புதுக்கோட்டை ராமச்சந்திரன், கறம்பக்குடி கரிகாலன், திண்டுக்கல் ரத்னம், சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் சண்முகராஜ் ஆகியோரின் வீடுகள், அலுவலகங் களில் 2 நாட்கள் சோதனை நடந்தது. இந்த சோதனையில், ஆயிரம் கிராம் தங்கம், 2.33 கோடி ரொக்கம், முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை, தமிழக அரசின் நீர்வளத்துறைக்கு நேற்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், 2021 ஏப்ரல் முதல் நடந்த ஆற்றுமணல் விற்பனை குறித்த தகவல்களையும்,மணல் சேமிப்பு ஒப்பந்த விவரங்களையும் தர வேண்டும்' என்று கேட்டுள்ளது.

அமலாக்கத்துறையின் இந்த கடிதம், அரசு அதிகாரிகள், ஒப்பந்ததா ரர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் திருவானைக்கோவிலில் செயல்பட்டு வந்த மணல் குவாரி கடந்த நான்கு நாட்களாக மூடப்பட்டுள்ளது மணல் அள்ள மாட்டுவண்டிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் பொக்லைன் கொண்டு லாரியில் அள்ளப்பட்டதால் நிறுத்தி வைத்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision