ஸ்ரீரங்கத்தில் தீ விபத்து இரண்டு சக்கர வாகனங்கள் பொருட்கள் எரிந்து நாசம்

Sep 21, 2022 - 04:48
Sep 21, 2022 - 06:12
 907
ஸ்ரீரங்கத்தில் தீ விபத்து இரண்டு சக்கர வாகனங்கள் பொருட்கள் எரிந்து நாசம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மேலச்சித்திரை விதியின் பின்புறம் மேல அடையவளஞ்சான் தெருவில் உள்ள கல்யாணசுந்தரம் மகன் திருவேங்கடம் வீட்டில் இன்று மாலை வீட்டின் மேற்கூரை தீப்பற்றி ஏரிந்தது. இதனால் ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதி முழுவதும் கரும்புகையாக காணப்பட்டது. மளமளவென்று தீ பற்றியதால் வீட்டில் இருந்த  பொருட்கள் வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனங்களும் தீயில் ஏரிந்து கருகியது.

ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறை தகவல் கொடுத்த உடன் தீயை அணைக்கும் பணியில்  தீயணைப்பு துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு சுமார் 50 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீ விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீரங்கம் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6sa
#டெலிகிராம் மூலமும் அறிய...... https://t.co/nepIqeLanO