அரசு பள்ளி மாணவிக்கு சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு
சென்னையில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்குபெற்ற மணப்பாறை லூர் அரசு பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த செவலூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர் நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ரெ.வசந்தலெட்சுமி. இவர் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சனிக்கிழமை சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பள்ளியின் சார்பில் கலந்துகொண்டார். அதில் மாணவி மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளார்.
அவருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் மதுமதி, பதக்கம், கோப்பை, சான்றிதழ் மற்றும் ரூ.750-க்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார். ஊர் திரும்பியுள்ள மாணவி இன்று காலை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துகளை பெற்று கொண்டார். மாணவியை வெகுவாக பாராட்டிய சட்டமன்ற உறுப்பினர் பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
மாணவியினை பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளதற்கு ஆசிரியர்களும், ஊர் மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். கிரேண்ட் மாஸ்டர்களுடன் விளையாடியது பெருமையாக உள்ளது. அவர்களை போல் தானும் செஸ் போட்டியில் உயர்ந்த இடத்தை பிடிக்க வேண்டுமென மாணவி வசந்தலெட்சுமி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் மு.ம. செல்வம், மமக மாநில அமைப்பு செயலாளர் காதர் முகைதீன், மமக திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC, அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO