திருச்சியில் கொட்டப்பட்டுள்ள அபாயகரமான கழிவுகள் - பொதுமக்கள் அச்சம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் உள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரி அந்த கல்லூரியில் எதிரே உள்ள தனியார் நிறுவனத்தில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய அபாயகரமான துத்தநாக பித்தளை கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.
இதனால் அந்த துத்தநாக துகள்கள் காற்றில் கலந்த பகுதியில் பரவுவதால் அந்தப் பகுதியில் குடி இருக்கும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அரசு பாலிடெக்னிக் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகள் என பல தரப்பட்டினருக்கு சுகாதார சீர்கேடு சுவாச கோளாறு, ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அந்த தனியார் நிறுவனம் சம்பந்தப்பட்ட துவாக்குடி நகராட்சி நிர்வாகத்திடமும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமும் முறையாக அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. மேலும் பாதுகாப்பு இல்லாமல் பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய பொருளை திறந்த வெளியில் தனியார் நிறுவனம் கொட்டி உள்ளது அப்பகுதியில் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதுடன் அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள அபாயகரமான துத்தநாக பித்தளை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn