முக்கொம்பு கதவணை 60 சதவீத பணிகள் நிறைவடைந்தது - தலைமை பொறியாளர் ஆய்வு!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம், வாத்தலை என்னும் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஏற்கனவே இடிந்து விழுந்த பழைய கதவணைக்கு பதிலாக புதிதாக கதவணைகள் கட்டும் பணிகள் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்டது.
தமிழக முதல்வரின் அறிவுரைப்படி, இரவு பகலாக போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் இன்னும் 4 மாதத்திற்குள் முடிக்க திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் S.ராமமூர்த்தி அறிவுறுத்தினார். மேலும், இப்பணிகள் தரம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
Advertisement
மேலும் இக்கட்டுமானம் மேற்கொண்டுவரும் L&T நிறுவனத்திற்கு கூடுதல் ஆட்களை நியமித்து பணிகள்,ஒப்பந்த காலத்திற்கு முன்பாகவே முடிக்க அறிவுரை வழங்கினார். தற்போது,484 மையங்களில் 463 பணிகள் முடிக்கப்பட்டு 60% பணிகள் நிறைவுபெற்றுள்ளது. இந்த ஆய்வின் போது, நடுக்காவிரி வடிவில் வட்டம்
திருவேட்டைச்செல்வம் கண்காணிப்பு பொறியாளர், R. பாஸ்கர் செயற்பொறியாளர் ஆற்றுப்பாதுகாப்பு கோட்டம் திருச்சி,
கீதா செயற்பொறியாளர்,
Advertisement
சிறப்புத்திட்ட கோட்டம் திருச்சி, கி. ஜெயராமன் உதவிசெயற்பொறியாளர் இலால்குடி உபகோட்டம் மற்றும் உதவி பொறியாளர்கள், சீனிவாசன் திட்டமேலாளர் L&T ஆகியோர் கலந்து கொண்டனர்