திருச்சியில் மக்கள் வெளிவருவதை குறைப்பதற்காக வண்ண அட்டைகள் வழங்கும் காவல்துறை!!

திருச்சியில் மக்கள் வெளிவருவதை குறைப்பதற்காக வண்ண அட்டைகள் வழங்கும் காவல்துறை!!

திருச்சி திருவரம்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள 20 ஊராட்சிகளுக்கு உட்பட்ட மக்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வெளிவரும் வகையில் அனுமதி அட்டை வழங்கப்பட உள்ளது.மக்கள் அதிக அளவில் வெளி வருவதை தடுப்பதற்காக பச்சை, ஊதா, ரோஸ் என மூன்று வகையான அட்டை வழங்கப்படுகிறது.

பச்சை நிற பாஸ் வைத்திருப்பவர்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும்,
ஊதா நிற பாஸ் வைத்திருப்பவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும்,
ரோஸ் நிற பாஸ் வைத்திருப்பவர்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் தங்களுடைய அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் வெளியே
 வர முடியும்.

Advertisement

திருவெறும்பூர் சரக காவல் துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் நடந்த கலந்தாலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு, இன்று முதல் மக்களுக்கு வீடுகளுக்கு சென்று பாஸ் வழங்கப்பட உள்ளது. இதன்படி மக்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதி அட்டையை வைத்து வாரத்தில் இரண்டு நாட்கள் வெளிவர வேண்டும். ஞாயிற்றுக்கிழமை அன்று யாரும் வெளிவர அனுமதி இல்லை.மேலும் இந்த கார்டின் பின்புறம் கையொப்பமிட கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் ஒருமுறை வெளியே வருபவர்களுக்கு கையெழுத்திட்ட பிறகு மீண்டும் மீண்டும் வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதி அட்டையை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு ஒருவர் மட்டுமே வெளியில் வர அனுமதி, காலை 6 மணி முதல் ஒரு மணி வரை பொருட்களை வாங்குவதற்கு 15 வயதிலிருந்து 60 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே வெளியில் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.