300 டன் வெங்காயத் தேவைக்கு வெறும் 100 டன் வெங்காயம் மட்டுமே திருச்சி வந்தடைந்தது‌‌:

300 டன் வெங்காயத் தேவைக்கு வெறும் 100 டன் வெங்காயம் மட்டுமே திருச்சி வந்தடைந்தது‌‌:

முன்பெல்லாம் வெங்காயத்தை வெட்டினால் தான் கண்களில் கண்ணீர் வரும். ஆனால் இப்போது வெங்காய விலையை கேட்ட உடனேயே கண்கள் கலங்குகின்றன.ஓட்டல்களில் கூட வெங்காய பச்சடியை காண்பது அரிதாக தான் இருக்கிறது.ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உத்திரபிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வெங்காய உற்பத்தி அதிக அளவு காணப்படும்.ஆனால் சமீபத்தில் பெய்த கன மழையால் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அதிக கனமழையால் இருக்கிற வெங்காயங்களை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லக் கூட போக்குவரத்து தடையாக இருக்கிறது.

இன்று திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டிக்கு பெரிய வெங்காயம் 100 டன் இன்று வந்ததடைந்தது. பெரிய வெங்காயம் மொத்த விற்பனையாக 80 ரூபாயிலிருந்து 130 ரூபாய் வரை விற்கப்பட்டது. சின்ன வெங்காயம் பெரம்பலூர்,துறையூர் மற்றும் கோவை ஆகிய பகுதியில் இருந்து 70 டன் மட்டுமே வந்தது .இதனால் 80 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரை மொத்த விற்பனையாக சின்ன வெங்காயம் விற்கப்பட்டது.சில்லரை விற்பனையில் இரண்டு வெங்காயமும் 150ரூபாயை தாண்டுகிறது.

8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் திருச்சிராப்பள்ளி மாநகரத்திற்கு வெறும் 100 டன் வெங்காயம் என்பது சிம்ம சொப்பனம் தான். எனவே மக்களின் தேவை என்பது
 தலா 300 டன் வெங்காயம் இருந்தால்தான் சராசரி வாழ்க்கையை சீராக நடத்த முடியும் என்பதே நிதர்சனம்.