மலேசிய ஆசிரியர் குழுவினர் திருச்சி வருகை:

மலேசிய ஆசிரியர் குழுவினர் திருச்சி வருகை:

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் இடைமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியை மலேசிய ஆசிரியர்கள் 20 பேர் பார்வையிட்டனர். மலேசிய கல்வி அலுவலர் புஷ்பநாதன் தலைமையில் “தமிழகத்தின் கல்விச் செயல்பாடுகள், பள்ளிகளின் வசதிகள், மாணவர்கள் கற்றல் செயல்பாடுகள்” ஆகியவற்றை பற்றி பார்வையிட வந்திருந்தனர்.

அவர்களை திருச்சி முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி மற்றும் திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் பாரதி விவேகானந்தன் ஆகியோர் வரவேற்று தமிழக அரசின் கல்வித் திட்டங்கள், சிறப்புக்கள் பற்றிக் கூறினார்கள். பள்ளி மாணவர்களின் கற்றல் – கற்பித்தல் முறைகள் குறித்து வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்து காட்டினர்.கல்வித் தகவல் மேலாண்மை முறை, Q R code மூலமாக பாடப்புத்தக கருத்துக்களை மாணவர்கள் மேலும் தெளிவடைய உதவுதல் போன்றவை மலேசிய அசிரியர்களுக்கு புதுமையாக இருப்பதாக கூறினார்கள்.

மேலும் பிராட்டியூர் பள்ளி மாணவர்களின் பறையாட்டம்., வடக்கு பாகனூர் பள்ளி மாணவர்களின் தேவராட்டம், மயிலாட்டம், புங்கனூர் பள்ளி மாணவர்களின் கும்மி, கோலாட்டம் போன்ற பாரம்பரிய கலைகளை பார்த்து ரசித்து வியந்து பாராட்டினர்.
தமிழக கல்வித் திட்டங்கள் குறித்து பாடலாகவும் பாடிக் காட்டினார்.
மலேசியா ஆசிரியர்கள் தமிழகப் பள்ளிகளில் கலைகளும் பாரம்பரியமும் காப்பாற்றப்படுவதாக பாராட்டிச் சென்றனர்.