மூன்று மாதங்களில் 30 இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு கார்கள் திருடிய தனி திருடன்: திருவெறும்பூர் போலீசாரிடம் சிக்கினான்!
தனது இரண்டாவது மனைவியை சொகுசாக வைக்க மூன்று மாதங்களில் 30 இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு கார்களை திருடிய பலே திருடன் – தனி ஒருவன் திருவெறும்பூர் போலீசாரிடம் சிக்கினான்.கடந்த மூன்று மாதங்களாக திருவெறும்பூர் பெல் தொழிற்சாலை துவாக்குடி, லால்குடி, திருச்சி மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டுப் போய் வருவது குறித்து அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளது.
இப்படி தொடர் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின்பேரில் திருவெறும்பூர் உட்கோட்ட உதவி கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே மேற்பார்வையில் திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானவேல் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு வாகன திருட்டில் ஈடுபடுவர்கள் யார் என தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர்.
இதனிடையே நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் கடந்த 22ம் தேதி திருவெறும்பூர் உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் திருடு போயிருந்தது. இதுதொடர்பாக திருவரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதேபோல், திருவெறும்பூர் கணேச புரத்தை சேர்ந்த ஷேக் முகமது மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் திருடு போயிருந்ததாக புகார் அளிக்கப்பட்டு இருந்தது.கடந்த 20ம் தேதி திருவெரும்பூர் காந்தி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் ரயில்நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு எதற்காக நிறுத்தப்பட்டிருந்த வாகனம் திருடு போனது, அதேபோல பெல் நிறுவன உதவி பொது மேலாளர் ஒருவரின் கார் திருடு போயிருந்தது இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவெறும்பூர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று இரவு திருவெறும்பூர் மலை கோவில் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவனை பிடித்து விசாரித்தபோது அவன் தஞ்சை மாவட்டம் வீரசிங்கம்பேட்டை நடுக்காவேரி சேர்ந்த மரியதாஸ் மகன் அகஸ்டின் என்பதும் அவன் திருச்சி திருவெறும்பூர் பெல் தொழிற்சாலை, துவாக்குடி, லால்குடி மணிகண்டம், திருச்சி ஜங்ஷன் கரூர் கும்பகோணம் செங்கிப்பட்டி காங்கேயம் ஆகிய பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.மேலும், தொடந்து விசாரணை நடத்தியதில் திருடப்பட்ட வாகனங்கள் அனைத்துமே பழைய இரும்பு வியாபாரம் கடைகளில் விற்றதோடு, அதில் வந்த பணத்தை தனது தேவைக்கு அதிகமாகவே செலவு செய்து உல்லாசமாக இருந்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ள அகஸ்டின், தஞ்சை மாவட்டம் கிழக்கு பகுதியில் 10 வாகனங்களையும், மன்னார்குடி மயிலாடுதுறை கரூர் காங்கேயம் உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் திருடியும் சிறைக்கு சென்று வந்துள்ளார்.இவருக்கு உதவியாக தனது மருமகன் கேண்டில் ராஜா என்பவர் உடன் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து 30 இரு சக்கர வாகனங்களும் 2 கார்களும் பறிமுதல் செய்தனர். இதில் பெல் நிறுவன உயர் அதிகாரி ஒருவரின் கார் என்பது குறிப்படத்தக்கது.கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் கண்டு தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் அகஸ்டின் தான் திருடியவர் என்பதும் தெரிய வந்துள்ளது.தனது இரண்டாவது மனைவியின் ஆடம்பர செலவுக்காக தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளேன் என்று புலம்பிய திருடன்.௹பாய் 15 லட்சம் மதிப்புள்ள மூன்று மாதங்களில் 30 இருசக்கர வாகனம் நான்கு கார்கள் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது