தனியார் மயமாக்குவதை கண்டித்து துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் பட்டினிப்போராட்டம் - 12ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

தனியார் மயமாக்குவதை கண்டித்து துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் பட்டினிப்போராட்டம் - 12ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை ஊழியர்கள் வரும் 12ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.


மத்திய அரசின் நேரடி பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத தொழிற்சாலைகளை கார்ப்பரேசன் மயமாக்கும் மத்திய அரசின் முடிவினைக் கைவிட வலியுறுத்தி முதற்கட்டமாக
மகாத்மாவின் பிறந்த தினத்தில் தேசம் காப்போம் படைக்கல தொழிற்சாலைகளை காப்போம் என்ற கோரிக்கையை முன்வைத்து திருச்சி  துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

தொழிற்சாலையை அருகே நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இன்று ஒருநாள் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அடுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர். மத்திய அரசு உடனடியாக தனியார்மயமாக்குவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement