தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி  ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மல்லிகா பேகம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். இதில் 1993 -ம் ஆண்டு பணியில் சேர்ந்து பதவி உயர்வு பட்டியலில் காத்திருக்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதம் முதல் 24 மாதம் வரை நமது மையத்தில் இணை உணவை டி.எச்.ஆர். ராக வாங்கக்கூடிய பயனாளிகளின் முகத்தை புகைப்படம் எடுத்து, போஸான் டிராக்கரில் பதிவு செய்யும் முறையை உடனடியாக கைவிட வேண்டும்.

மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளருக்கான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். என்பன உள்பட கோரிக்கைகள் வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் சித்ரா, மாவட்ட பொருளாளர் ராணி, சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன், மற்றும் திருச்சி மாவட்டத்தில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து வருகிற 21-ந்தேதி சென்னையில் கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது.

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

 திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision