மறைந்த கவிஞர் நந்தலாலாவுக்கு அவருடைய நண்பர் குமரப்பன் நினைவஞ்சலி கவிதை

*என் நந்தலாலா*
*நீ என்னுள் வந்ததாலா எத்தனையே! என் சிந்தை மாற்றம்.*
* சிறுவயதில் உன் நிழல் விழும் இடம் பார்த்து என் சிறு கை பற்றி அழைத்து செல்வாய், வெயில் படாமல் கூட்டத்திற்கு*
*திண்பண்டத்துடன் சேர்த்து மார்க்சியத்தையும் ஊட்டினாய்*
*தந்தையாய் நீ மகனாய் நான்*
*என்னை மேடை ஏற்றி பேச வைத்து தலைமையாய் நின்று அழகு பார்த்தாய்*
*ஆசிரியராய் நீ மாணவனாய் நான்*
*எத்தனையோ ஆளுமைகளை நீ எனக்கு காண செய்தாய்*
*அதை காணாமல் நீ எங்கு சென்றாய்?*
இரயில் நிலையத்தில் இரயிலுக்காக காந்திருந்த போது என் மடியில் தலை வைத்து எத்தனை எத்தனையோ தர்க்க விவாதங்கள் நமக்குள், அத்தனையும் விளக்கினாய்
*கருத்து தலைவனாய் நீ தொண்டனாய் நான்*
*இன்றும் அறிவு பசி எனக்குள் தீர்க்காமல் எங்கு சென்றாய் அதற்குள்*
*என்னை விட்டு சென்றதால் உன்னை திட்டி தீர்ப்பதா?*
*இல்லை*
*அறிவு தந்து சென்றதால் கண்ணீரால் உன் பாதம் துடைப்பதா?*
*காவியமாய் நீ* *கண்ணீரால் நான்*
இப்படிக்கு உங்கள் தோழன் நான்
கா. குமரப்பன் த.மு.எ.க.ச.
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision