திருச்சி நீதிமன்ற ஊழியரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 பேர் கைது

திருச்சி நீதிமன்ற ஊழியரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 பேர் கைது- தப்பி ஒட முயன்றவருக்கு கால் முறிவு.திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அண்ணா வளைவு கலைஞர் தெருவை சேர்ந்தவர் ஷர்புதீன் இவரது மகன் முகமது உசேன் (35) இவர் திருச்சி 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி(01.03.2025) தனது வீட்டின் அருகே உள்ள குடிநீர் பைப்பில் தனது குழந்தையை வைத்துக்கொண்டு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பொழுது அவர்களின் மீது போதையில் மோதுவது போல் மூன்று பேர் நடந்து வந்து உள்ளனர்.அவர்களை ஏன் இப்படி வருகிறீர்கள் என முகமது உசேன் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவன் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து முகமது உசேனின் கை மற்றும் தோள்பட்டையில் வெட்டி விட்டுதப்பி ஓடிவிட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த முகமது உசேனை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பு ஓடிய குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் துவாக்குடி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரனுக்கு சொசைட்டி தெரு பகுதியில் ஆயுதத்துடன் ஒருவன் தகராறு செய்து வருவதாக தகவல் கிடைத்ததுஅங்கு சென்றுப் பார்த்தப் போது சொசைட்டி தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் சாந்தகுமார் (25) போலீசாரை கண்டது தப்பி ஓடி அங்கு உள்ள சருக்கு பாறையில் இருந்து குதித்தப் போது சாந்தகுமார் வலது கால் முறிந்தது. அவன் தான் முகமது உசேனை அருவாளால் வெட்டிய வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி என போலீசாருக்கு விசாரணையில் தெரிந்தது. சாந்தகுமாரிடம் விசாரித்தப்போது அவன் நண்பர்களான துவாக்குடி மலை வடக்கு அக்பர் சாலை பகுதியை சேர்ந்த சுந்தர் மகன் மணி, சொசைட்டி தெரு பகுதியில் வசிக்கும் பிரேம் ஆகிய 3 பேரும் தான் சேர்ந்து முகமது உசேனை அரிவாளாள் வெட்டினோம் என கூறி உள்ளான்.
மணி, பிரேம் இருவரையும் துவாக்குடி சப்இன்ஸ்பெக்டர் நாகராஜன் கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் இருவரையும் அடைத்தார்.கால் முறிவு ஏற்பட்ட சாந்தகுமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision