தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற 34 மாணவர்களுக்கு பயிற்சி-ஆசிரியர்களுக்கு பாராட்டு நிகழ்வு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் (NMMS) வெற்றி பெற்ற 34 மாணவர்களுக்கு/ பயிற்சி ஆசிரியர்களுக்கு பாராட்டு நிகழ்வுதமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் சார்பில் நேற்று 17.04.2025 புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியி
தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் (NMMS) வெற்றி பெற்ற 34 மாணவர்களுக்கும், பயிற்சி ஆசிரியர்களுக்கும் பாராட்டு நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட தலைவர் ஜான்சன் பிரான்சிஸ் அவர்கள் தலைமை வகித்தார்.
நிகழ்வின் தொடக்கத்தில் மாவட்ட இணைச் செயலாளரும், துளிர் திறனறிதல் தேர்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான க.பகுத்தறிவன் அவர்கள் அறிவியல் பாடல் பாடி அனைவரையும் வரவேற்றார்.மாவட்டச் செயலாளர் மு.மணிகண்டன் அவர்கள் அறிமுகவுரையாற்றி, பாராட்டுரை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை.ஜார்ஜ் அவர்களும், மாவட்ட துணைத் தலைவரும், புனித வளனார் கல்லூரி
வேதியியல் துறை பேராசிரியருமான முனைவர்.அருண்விவேக் அவர்களும், மலைக்கோட்டை கிளை தலைவர் தனலெட்சுமி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.மாவட்டத்தில் துளிர் திறனறிதழ் தேர்வில் அதிக மாணவர்களை பங்கேற்பு செய்தமைக்காகவும், NMMS தேர்வில் அதிக மாணவர்களை தேர்ச்சி பெற்றமைக்காகவும் தலைமை ஆசிரியர் பாராட்ட பெற்றார். NMMS தேர்வில் மாநில
அளவில் மூன்றாம் இடத்தை பிடித்த செல்வன்.அகில்வாணனை பாராட்டி குழந்தைகள் துளிர் புத்தகம் வழங்கப்பட்டது.தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் (NMMS) வெற்றி பெற்ற 34 மாணவர்களுக்கும்/ பயிற்சி ஆசிரியர்களுக்கும் பாராட்டி புத்தக பரிசு வழங்கப்பட்டது. நிறைவாக மாவட்ட பொருளாளர் ச.மாரிமுத்து அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
மாவட்ட துணைத் தலைவரும், புனித வளனார் கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியருமான முனைவர்.ஜானி குமார் தாகூர் அவர்களும், மலைக்கோட்டை கிளை செயலாளர் ஹரிஹரன் அவர்களும் கலந்து கொண்டனர். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் இந்தக் கல்வியாண்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய துளிர் திறனறிதல் தேர்வில் பங்கு பெற்று சிறப்பிடம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision