பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாவட்டத்தில் இன்று இயங்கும் பள்ளிகள் -ஆசிரியர்கள் புலம்பல்

தொடர் விடுமுறை நாட்களில் அனைத்து பள்ளிகளும் விடுமுறை அறிவித்துள்ள நிலையில் மண்ணச்சநல்லூர் ஒன்றிய மட்டும் பள்ளிகளை இயக்கி வருகிறது.
வேலை நாள் குறையும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு வேறு ஒரு நாளில் இதனை சரி செய்திருக்கலாம். தொடர் விடுமுறை நாளில் வேண்டுமென்றே இதுபோன்று செய்வதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
ஏற்கனவே ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 6 7 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று நடைபெற்று வருகிறது.
அனைத்து ஆசிரியர்களும் இன்று பணிக்கு வந்துள்ளனர் இது தொடர்பாக பி ஓ வை தொடர்பு கொள்ள இரண்டு நாட்களாக முயற்சித்து அவர் கைபேசி எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்தனைக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இருக்கும் மாவட்டத்தில் இந்த நிலையா என ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision