சிறை கைதிகளுக்கு பொதுமக்களும் புத்தக தானம் செய்யலாம்! திருச்சி விஷன் அறக்கட்டளை சார்பில் புதிய முயற்சி!

சிறை கைதிகளுக்கு பொதுமக்களும் புத்தக தானம் செய்யலாம்! திருச்சி விஷன் அறக்கட்டளை சார்பில் புதிய முயற்சி!

 தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகள், பெண்கள் சிறைகளில் கைதிகளின் பயன்பாட்டுக்காக நூலகங்கள் உள்ளன.

இங்கு சுழற்சி முறையில் புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு கைதிகள் படிப்பதற்காக வைக்கப்படுகின்றன. திருச்சி மத்திய சிறை வளாகத்திலும் நூலகம் உள்ளது.  கைதிகளின் பயன்பாட்டுக்காக புத்தகங்கள் தானம் பெறும் கூண்டுக்குள் வானம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1300-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் பயன்பாட்டுக்காக புத்தகங்களை தானம் செய்ய விரும்பும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் திருச்சி விஷன் அறக்கட்டளை ஒரு புதிய முயற்சியை தொடங்கியுள்ளது புத்தக தான செய்ய விரும்பும் பொதுமக்கள்  9901965430 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் இருப்பிடம் குறித்து விவரங்களை தெரிவித்தால் அறக்கட்டளை சார்பில் ‌  தன்னார்வலர்கள் நேரடியாகவே வந்து  புத்தகங்களை பெற்றுக் கொள்வர். கிடைக்க பெறும் நூல்கள் அனைத்தும் திருச்சி மத்திய சிறைச்சாலை நூலகங்களுக்கு அனுப்பப்படும்.

ஒரு நூலகம் திறக்கப்படும் போது 100 சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்ற பொன்மொழிக்கு ஏற்ப நாம் அளிக்கும் ஒவ்வொரு புத்தகங்களும் அவர்கள் வாழ்க்கையை  நல்வழிப்படுத்தும்  விதமாக சிறந்த நாவல்களையும்  தலைவர்களின் புத்தகங்களையும்  பரிசாக அளிக்கலாம்.
  தமிழ் நாவல்களையும் தமிழ் வழி நூல்களையும் தானமாக அளிக்கலாம்.  ஒருவரின் வாழ்வை மாற்றுவதற்கான தொடக்கம் நம்மில் இருந்து தொடங்கட்டும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய

  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

 

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn