யானைகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் யானை உயிரிழப்பு

யானைகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் யானை உயிரிழப்பு

திருச்சிராப்பள்ளி மண்டலம் திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம் வன உயிரினம் மற்றும் பூங்கா சரகத்திற்கு உட்பட்ட எம் ஆர் பாளையம் காப்பு காட்டில் 50 ஏக்கர் பரப்பளவில் 10 பெண் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் யானைகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் யானை ஜெய்னி (வயது 60) கடந்த ஒரு மாதமாக உடல்நிலை குறைவால் இருந்ததைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ குழுக்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை முறைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (03.03.2025) ஜெய்னி  வயது 60 பெண் யானை மிகவும் சோர்வாகவும் பலவீனமாகவும் மற்றும் படுத்த நிலையிலேயே காணப்பட்டதை தொடர்ந்து சிறப்பு மருத்துவர் குழு மருத்துவர்கள் அறிவுரையின்படி கால்நடை உதவி மருத்துவர் யானைகள் மறுவாழ்வு மையம் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளித்து வரப்பட்ட யானை சிகிச்சை பலனின்றி மாலை சுமார் 4:30 மணி அளவில் இறந்து விட்டதாக உறுதி உறுதிப்படுத்தப்பட்டது.

பின் இன்று (04.03. 2025)ஆம் தேதி காலை சுமார் 9:30 மணியளவில் திரு எ. பெரியசாமி இவப தலைமை வன பாதுகாவலர் திருச்சி அவர்களின் மேற்பார்வையில் திருமதி எஸ்.கிருத்திகா இவப மாவட்ட வன அலுவலர் அவர்களின் தலைமையில் திரு ஐ.காதர் பாட்ஷா உதவி வனப் பாதுகாவலர் /உதவி இயக்குனர் வன சரக அலுவலர் திரு வே.பா சுப்பிரமணியன் உள்ளிட்ட வனப் பணியாளர்கள் முன்னிலையில்

டாக்டர் ஏ. சுகுமார் வன கால்நடை பன்முகம் மருத்துவர், டாக்டர் வி.ஜானகி தாயர், உதவி இயக்குனர் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு திருச்சி டாக்டர் எம். சிவச்சந்திரன் வன கால்நடை உதவி மருத்துவர், யானைகள் மறுவாழ்வு மையம் டாக்டர் எஸ்.சிரஞ்சித்,கால்நடை உதவி மருத்துவர் நோய் புறனாய்வு பிரிவு டாக்டர் ஏ. பிரகாஷ், கால்நடை உதவி மருத்துவர் சிறுகனூர் திரு டி.பாக்யராஜ் ஆய்வக உதவியாளர் நோய் புறனாய்வு பிரிவு ஆகியோர் உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி உடற்கூறாய்வு செய்யப்பட்ட யானை மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு சேமிக்கப்பட்டது பின்பு உடற்கூறாய்வு செய்யப்பட்ட யானை எம் ஆர் பாளையம் காப்புக்காட்டில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் வடக்கு எல்லையில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே குழிதோண்டி உரிய வழிகாட்டுதல் நெறிகளின் படி புதைக்கப்பட்டது.

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision