தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி
திருச்சி மாவட்டம் சிறுகமணியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேனீ வளர்ப்பு குறித்த சான்றிதழ் பயிற்சி நாளை 13 - ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியில் தேனீ வகைகள், தேனீ குடும்பம், தேனீ வளர்ப்புக்கான உபகரணங்கள், தேனீ கூட்டங்களை கண்டுபிடித்து வளர்க்கும் முறை, தேனீ கூட்டங்களை ஆய்வு செய்யும் முறை, தேனீ பராமரிப்பு முறை, தேனீக்களின் இயற்கை எதிரிகளை நிர்வகிக்கும் முறைகள், தேனீக்களின் உணவு பயிர்கள், தேன் சுத்தம் செய்தல் மற்றும் சேமித்து வைத்தல், தேனை வளர்க்கும் தொழில் முனைவர்களின் அனுபவ பகிர்வு, சந்தைப்படுத்துதல் போன்றவை பயிற்சியின்போது எடுத்துரைக்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சி கையேடு பயிற்சி சான்றிதழ் மதிய உணவு வழங்கப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர் வியாழக்கிழமை காலை 09:00 மணிக்கு வருகை புரிந்து பயிற்சி கட்டணம் 590 நேரடியாக செலுத்த வேண்டும். காலை 9:30 மணி முதல் 05:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 8122586689, 0431- 2962854 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சி முன்பதிவிற்கு இன்றே கடைசி நாள் என திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision