தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு

தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் அனல் பறக்கும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் சில தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பும், பலத்த எதிர்ப்பும் வாக்காளருக்கு மத்தியில் எழுந்து வருகிறது. பொதுமக்கள் நீண்ட நாட்களாக விடுத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றாததால் அவர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக திருச்சி மாவட்டத்தில் ஆங்காங்கே பிளக்ஸ் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக சமயபுரம் S.கண்ணனூர் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட 6வது வார்டு பொதுமக்கள், குடிநீர் வசதி, மழைநீர் வடிகால் வசதி, சாலை வசதி,பொது கழிப்பிட வசதி, சாக்கடை வசதி, மின் மாற்றி வசதி ஆகியவை குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் செவி சாய்க்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்களால் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் பொதுமக்களின் குடியுரிமை சான்றாக உள்ள ஆவணமான குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு இவை அனைத்தும் மாவட்ட ஆட்சியாளரிடம் ஒப்படைக்கப்படும் என்று அடிப்படை வசதிகளுக்கு தவிக்கும் 6 வது வார்டு பொதுமக்கள் சமயபுரம் S.கண்ணனூர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision