பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கல்பாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 14.31 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம் கட்டடத்தின் கட்டிடத்தின் கட்டுமானப் பணியினையும், ஆயக்குடி ஊராட்சியில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் சார்பில் பரப்பு விரிவாக்கம் கொய்யா ஒரு ஹெக்டேரில் பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருதையும்,

கொணலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தூய்மை செய்யும் பணிகள் நடைபெறுவதையும், கொணலை ஊராட்சியில் குடிசைகளில் குடியிருந்து வரும் அனைத்து மக்களுக்கும் புதிதாக ஆர்.சி.சி. கூரை உள்ள வீடுகள் கட்டும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூபாய் 3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மாதிரி இல்லத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி ஊராட்சி ஒன்றியம், ஆர்.வளவனூரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 16 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளையும், மகிழம்பாடி இருளர் காலனியில் 12 நபர்களுக்கு பழங்குடியினர் நலத்திட்டத்தின் கீழ் ரூபாய் 52.49 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்திட தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், இலால்குடி ஊராட்சி ஒன்றியம், காட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு உட்கட்டமைப்பு வசதிகள், மருந்துகளின் இருப்பு உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும், சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகளிடம் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வுகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision