மூன்று நபர்களுக்கு ஆயுள் தண்டனை

மூன்று நபர்களுக்கு ஆயுள் தண்டனை

கடந்த 13.09.16-ம் தேதி ஆரோக்கியதாஸ் த/பெ யேசுதாஸ், LIC நகர், காட்டூர் (CH/PR) (முன்னாள் இராணுவ வீரர்) என்பவர் பள்ளிக்கூடத்தில் பயின்று வந்த சிறுமிகளை, தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார். இது சம்மந்தமாக, திருவெறும்பூர் அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, வழக்கானது நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்த நிலையில், நேற்று (28.11.2023)-ம் தேதி திருச்சி மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் மேற்படி எதிரிக்கு 10 வருட ஆயுள் தண்டனை மற்றும் ரூ.6500 அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரசன்னா என்பவருக்கும். நித்யா கமலா என்பவருக்கும் கடந்த 10.09.2010-ம் தேதி திருமணமாகி, 5 வயதில் லக்சிகா என்கிற பெண் குழந்தை இருந்ததாகவும், இந்நிலையில், மேற்படி நித்யா கமலா என்பவருக்கும். அவர் பணிபுரியும் கல்லூரியில், அவருடன் பணிபுரிந்து வரும் முத்துபாண்டியன் என்பவருடன் கள்ளதொடர்பு ஏற்பட்டதாகவும், இதனால் பிரசன்னா மற்றும் நித்யா கமலா ஆகிய இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் தெரியவருகிறது. பின்னர், மேற்படி பிரசன்னா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடுத்தாகவும், குழந்தை தன் தாய் நித்யா கமலா அரவணைப்பில் இருந்ததாகவும் தெரியவருகிறது. பின்னர் திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் வாடகை வீட்டில், மேற்படி நித்யா கமலா. முத்துபாண்டியன் மற்றும் குழந்தை லக்சிகா ஆகியோர் குடியிருந்து வந்ததாகவும்,

இந்நிலையில், கடந்த 21.05.2019-ம் தேதி இவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக மேற்படி குழந்தை இருப்பதாக எண்ணி, மூங்கில் பட்டை மற்றும் தென்னை பட்டை ஆகியவற்றை கொண்டு உடல் முழுவதும் தாக்கி கொலை செய்துள்ளனர். இது சம்மந்தமாக, காட்டுப்புத்தூர் காவல்நிலைய குற்ற எண். 90/19, U/s 302 IPC & 34 IPC வழக்கு பதிவு செய்யப்பட்டு. வழக்கானது நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்த நிலையில், இன்று 29.11.2023-ம் தேதி திருச்சி மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், மேற்படி வழக்கின் எதிரிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் விதித்து நீதிபதி செல்வமுத்துகுமாரி உத்தரவிட்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision