மூன்று நாட்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் ஆகிய தினங்களில் திருச்சியில் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படும்

மூன்று நாட்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் ஆகிய தினங்களில் திருச்சியில் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படும்

சட்டமன்ற பொது தேர்தல் 2021ஐ முன்னிட்டு 04.04.2021 (ஞாயிற்றுகிழமை) அன்று காலை 10.00 மணி முதல் 06.04.2021 (செவ்வாய்கிழமை) நள்ளிரவு 12.00 மணி வரை மூன்று நாட்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 02.05.2021 (ஞாயிற்றுகிழமை)  ஆகிய தினங்களில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டிருக்கும்.

அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள், ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும்.

மேலும், அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW