திருச்சியில் இருச்சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது - 17 இருச்சக்கர வாகனம் பறிமுதல்
திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலங்களில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் திருடு போனது. தொடர் வாகன திருட்டு பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இரு தினங்களாக வாகன திருட்டு தொடர்பாக காவல்துறை சார்பில் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கோள்ளப்பட்டது.
தொடர் வாகன திருட்டு தொடர்பாக காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் செல்லப்பா, தலைமை காவலர் இளங்கோவன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு வாகன திருடர்களை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று நொச்சிமேடு பகுதியில் நடைபெற்ற காவல் வாகன தணிக்கையின் போது இருச்சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து அந்த வாலிபரை காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டு மேற்கோண்ட விசாரணையில், அவர் மருங்காபுரி வட்டம் ஊத்துக்குளி கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் மகன் கார்த்திகேயன் (23) என்பதும், அவர் தொடர் இருச்சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து இளைஞர் ஓட்டிவந்த வாகனம் மற்றும் ஊத்துக்குளியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16 இருச்சக்கர வாகனங்கள் என 17 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள மணப்பாறை போலீஸார் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாலிபர் திருடிய வாகனங்களில் பெரும்பாலன வாகனங்கள் சைடு லாக் போடாமல் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn