மணிகண்டம் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் காலிப்பணியிடம் - விண்ணப்பிக்க அழைப்பு!!

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் ஊரக ஊராட்சி மற்றும் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடம் இருந்து வருகின்ற பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advertisement
காலியாக உள்ள 2 அலுவலர் உதவியாளர் பணியிடங்களுக்கு 15,700 முதல் 50,000 வரை சம்பளம்.01/07/2001 அன்று 18 வயது நிறைவு செய்த நபராக இருக்க வேண்டும். https.//trichirappalli.nic.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Advertisement
மேலும் ஆணையர், ஊராட்சி ஒன்றியம், மணிகண்டம், திருச்சி என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய