நோயாளிக்கு பேஸ்மேக்கர் பொருத்தும் நவீன சிகிச்சை-திருச்சி காவேரி மருத்துவமனை சாதனை
தமிழ்நாட்டின் முன்னனி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ஒன்றான காவேரி மருத்துவமனை குழுமத்தில் ஒரு பிரிவு காவேரி ஹார்ட்சிட்டி திருச்சி.
இங்கு 58 வயதுடைய நோயாளி 2017 ஆம் ஆண் பேஸ்மேக்கர் கருவியின் ஒவ்வாமையினால் பலமுறை பொருத்தி சிகிச்சை பலன் அளிக்கவில்லை என்ற குறைபாடுடன் வந்தார்.
மருத்துவர் ஜோசப் மற்றும் அவருடனான மருத்துவக்குழு லீட்லெஸ் பேஸ்மேக்கர் கருவியை பொருத்த முடிவு செய்தனர். அதன்படி வெற்றிகரமாக லீட்லெஸ் பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது.
இதுபற்றி காவேரி மருத்துவமனை ஹார்ட்சிட்டியின் லீட் எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட் மற்றும் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் ஜோசப் கூறியதாவது,
நோயாளிக்கு முன்பு ஒரு மருத்துவமனையில் பேஸ் மேக்கர் 4 முதல் 5 முறை மார்பின் இடது மற்றும் வலது பக்கங்களில் பொருத்தப்பட்டது. இது வருக்கு அலர்ஜியினை மீண்டும் மீண்டும் ஏற்படுத்தியது.
எனவே, நானும் எனது குழுவினரும் நோயாளிக்கு லீட்லெஸ் பேஸ்மேக்கர் நன்மைகளை எடுத்து கூறி, இதனை பொருத்துவதினால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது என்று கூறினோம். நோயாளி இக்கருவியை பொருத்திக்கொள்ள ஒப்புக்கொண்டார்.
பேஸ்மேக்கர் ஒவ்வாமை என்பது ஒரு அரிய நிகழ்வாகும். இது லேசான தொற்று முதல் கடுமையான வீக்கம் வரை ஏற்படுத்தலாம். எனவே இதய நோயாளிகளுக்கு மன தளவில் கவலையும் மற்றும் அதிகப்படியான செலவுகளையும் ஏற்படுத்தும் விதமாக அமைகிறது.
லீட்லெஸ் பேஸ்மேக்கர் இ எலக்ட்ரோபிசியாலஜியில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கான குறிக்கோள் வழக்கமான பேஸ்மேக்கர் தொடர்புடைய சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது வழக்கமான டிரான்ஸ்வீனஸ் பேஸ்மேக்கரைவிட 90 சதவீதம் சிறியது. இது நேரடியாக இருதயத்திற்கு அனுப்பப்படும் ஒரு சிறிய கருவி. இதுதான் இயன்திரன் மின் சக்தி உள்ளடக்கிய கருவி என்பதால் இதனை நேரடியாக இதயத்தின் வலது அறையில் பொருத்தலாம்.
தொடை நரம்பிலிருந்து டிரான்ஸ்கெத்திட்டர் மூலம் இந்த கருவி செலுத்தப்பட்டு மார்பில் பொருத்தப்படுகிறது. எனவே வழக்கமாக பேஸ்மேக்கர் பொருத்துவதற்கு மார்பில் கீறல் ஏற்படுத்தவோ அல்லது மின்முனை கம்பிகள் மூலம் இதயத்துடன் இணைக்க வேண்டிய அவசியமோ இல்லை. இந்த குறிப்பிட்ட நோயாளிக்கு இந்த சிகிச்சை ஒரு சிறந்த தேர்வாக மாறியதாக டாக்டர். ஜோசப் கூறினார்.
திருச்சியில் இதுவே முதன்முறையாகவும் தமிழகத்தில் 2-வது முறையாகவும் டூயல் சேம்பர் கொண்ட இந்த வகை மேம்பட்ட லீட்லெஸ் சிப் பேஸ்மேக்கர் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய...