10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒரே இடத்தில் நின்று உறுதிமொழி ஏற்பு
திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை மருந்து பயன்பாடு அதிகரித்து வருகிறது. போதைக்கு அடிமையாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது... நமது முழு ஆற்றலையும் பயன்படுத்தி போதை பாதையை தடுத்தாக வேண்டும், அதற்கான உறுதிமொழியை எடுத்தாக வேண்டும். போதை மருந்துகள் தமிழகத்தில் நுழைவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும். விற்பனையை தடுக்க வேண்டும். போதை பயன்படுத்துவோரை அதிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
அந்த அடிப்படையில், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழியினை ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், காவல்துறை உயர் அதிகாரிகள்
உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக மாணவ, மாணவிகள், காவலர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO