திருச்சியில் வேலைவாய்ப்புக்கான புதிய இணையதளம்

திருச்சியில்  வேலைவாய்ப்புக்கான புதிய இணையதளம்

திருச்சியில் வேலைவாய்ப்புக்கான புதிய இணையதளம் உதயமானது.திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரம்யாஸ் ஹோட்டலில் NHRD திருச்சி பிரிவின் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் வேலை வாய்ப்புக்கான புதிய இணையதளத்தை (BNI support Director)  யூசுப் துவக்கி வைத்தார். உடன் மற்றும் மக்தூம் மொகைதீன், பரத் ஆகியோர் இந்த இணையதளத்திற்கான சிறப்பு அம்சங்களை விளக்கி பேசினர். திருச்சி விஷன்,Structring minds,DIGI PLUS இணைந்து இந்த புதிய வேலை வாய்ப்பு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

புதிய Vconnect இணையதளத்தை பற்றி மக்தூம் கூறுகையில் இந்த இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பெறுவது மட்டுமல்லாமல் கார்ப்ரேட் நிறுவனங்களில் பணிபுரியும் பணிபுரியவர்களுக்கும், வேலையில்  உள்ள யுக்திகளும் மேலும் அவர்கள் வேலை பளுவால்  ஏற்படும் மன அழுத்தங்களை குறைப்பதற்கான முகாம்களும் இந்த இணையதளம் மூலம் நடத்தப்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகள் இந்த இணையதளம் மூலம் பெற முடியும். முக்கியமாக வேலை வாய்ப்பு பெற விரும்புபவர்கள் https://vconnectjobs.com/ இந்த இணையதளத்தில் தங்களது முழு விவரங்களை பதிவு செய்து அனுப்பினால் அவர்களுக்கான துறையை அவர்கள் தேர்வு செய்து வேலைவாய்ப்பு பெற வி கனெக்ட்  உதவிகரமாக செயல்படும் எனவும் குறிப்பிட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn